இங்கிலாந்து இராணுவத்தில் ஏற்பட்டுள்ள ஆட்கள் பற்றாக்குறையை போக்க, அந்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள ஆப்கானிஸ்தான் முன்னாள் வீரர்களை பணியமர்த்த வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இங்கிலாந்தில் பயிற்சி பெற்ற மேஜர் நூர் அஜிஸ் அகமதுசாய் போன்ற பல திறமையான வீரர்கள், தற்போது அங்கு வீடற்ற நிலையில் வாடுவதுடன் தங்களை மீண்டும் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளுமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தற்போது நடைமுறையிலுள்ள கடுமையான குடியுரிமை விதிகள் , போர்க்கள அனுபவம் மிக்க இந்த வீரர்களைப் பயன்படுத்துவதற்கு தடையாக இருப்பதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் உட்பட பல முக்கிய நபர்கள், இந்தத் திறமையான மனிதவளத்தை பயன்படுத்திக்கொள்ளத் தவறியதற்காக பாதுகாப்பு அமைச்சகத்தைக் கண்டித்துள்ளனர்.
கடினமான சூழலில் இங்கிலாந்து படைகளுடன் இணைந்து பணியாற்றிய இவர்களுக்கு உரிய வாய்ப்பளிப்பதன் மூலம், அந்நாட்டின் இராணுவ வலிமையை மேம்படுத்த முடியும் எனவும் பார் தெரிவித்துவருகின்றனர்.
இவ்வாறு செய்வதன் மூலம் ஆப்கானிஸ்தான் வீரர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கும் ஒரு நிரந்தரத் தீர்வை எட்ட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.















