உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து, குற்றவாளி குல்தீப் சிங் செங்கார் விடுவிக்கப்பட்ட நிலையில், விசாரணை நடத்திய சி.பி.ஐ., அதிகாரி மீது பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது தாயாரும் புகார் அளித்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் கடந்த 2017ல் எம் எல் ஏவாக குல்தீப் சிங் செங்கார் பதவி வகித்த நிலையில்
உன்னாவில் உள்ள அவரது வீட்டிற்கு வேலை கேட்டுச் சென்ற 16 வயது சிறுமியை, அவர் கடத்திச் சென்று துஸ்பிரயோகம் செய்ததாக புகார் எழுந்தது.
இந்நிலையில் வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் குல்தீப் சிங், குற்றவாளி என, 2019ல் தீர்ப்பு அளித்ததுடன் அவர் சாகும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனக் கூறி ஆயுள் தண்டனை விதித்தது.
இதேவேளை இதை எதிர்த்து குல்தீப் சிங் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்ததுடன் பிணை வழங்கியது.
இந்நிலையில்டெல்லி உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்டவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவரும், அவரது தாயாரும் அதிகாரிகளை சந்தித்து, புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அதன்படி, விசாரணை மேற்கொண்ட சி.பி.ஐ., அதிகாரியும், நீதிபதியும் இணைந்து சதி செய்து விட்டனர் எனவும் இருவரும் குற்றவாளிக்கு சார்பாக செயற்பட்டனர் எனவும் நெருக்கடியான தருணத்தில் எங்களுக்கு துணையாக நிற்கவில்லை.எனவும் எங்களது வழக்கறிஞருக்கு சி.பி.ஐ., பக்கபலமாக இருந்திருந்தால், வழக்கில் நாங்கள் நிச்சயம் வென்று இருப்போம்’ எனவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ., உயரதிகாரிகளை சந்திக்க டெல்லியிலேயே காத்திருக்கப் போவதாகவும் இருவரும் கூறியுள்ளனர்.















