இங்கிலாந்தின் (Sheffield) ஷெஃபீல்ட் பகுதியில் உள்ள (Darnall ) டார்னால் பகுதியில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நடந்த ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலத்த காயமடைந்த இளைஞன் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
சம்பவத்தில் 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
குறித்த துப்பாக்கிச்சூட்டில் இளைஞரின் நெஞ்சில் பலத்த காயம் ஏற்பட்டு, அவர் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேவேளை, இந்தத் தாக்குதல் தொடர்பாக இருபது முதல் இருபத்தொன்பது வயதுக்குட்பட்ட நான்கு நபர்களை காவல்துறை அதிகாரிகள் கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ் கைது செய்துள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் இதுபோன்ற துப்பாக்கி கலாச்சாரத்தை சகித்துக்கொள்ள முடியாது என்று காவல்துறை தரப்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ஆதாரங்கள் அல்லது காணொளிகள் வைத்திருக்கும் பொதுமக்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட அதிகாரிகள், அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்த விரிவான விசாரணையைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் காவல்துறை, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.



















