அமெரிக்க அதிகாரிகளால் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட ஃபெர்ரிஸ் மாநில பல்கலைக்கழக சந்தைப்படுத்தல் பேராசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) உறுதிப்படுத்தியது.
முன்னாள் பேராசிரியர் சுமித் குணசேகரவின் பணிநீக்கம் குறித்து பல்கலைக்கழகம் விரிவாக்க கூற மறுத்துவிட்டது.
மிச்சிகனின் பிக் ரோபிட்ஸில் உள்ள பல்கலைக்கழகத்தின் சந்தைப்படுத்தல் துறையின் இணைப் பேராசிரியரான சுமித் குணசேகர, நவம்பர் 12 ஆம் திகதி டெட்ராய்டில் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்க நிறுவன அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குணசேகரா இலங்கையிலிருந்து ஆவணமற்ற முறையில் குடியேறியவர் என்றும் அவர் ஒரு பாலியல் குற்றவாளி என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர், குணசேகராவை நிர்வாக விடுப்பில் அனுப்பியதாக ஃபெர்ரிஸ் மாநில பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இந் நிலையில் அவர் குறித்து பதிவிட்டுள்ள உள்நாட்டு பாதுகாப்பு துறை, பல ஆண்டுகளாக, கனடாவில் தண்டனைகள் இருந்தபோதிலும், அமெரிக்காவில் சட்டப்பூர்வ அந்தஸ்தைப் பெற தகுதியற்றவராக கணிக்கப்பட்ட போதிலும் குணசேகரா விண்ணப்பங்கள் மற்றும் மேல்முறையீடுகளுடன் எங்கள் குடியேற்ற முறையை கையாள பலமுறை முயன்றார் – என்று கூறியுள்ளது.



















