• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
புத்தாண்டை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க  தலதா மாளிகையில் ஜனாதிபதி வழிபாடு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/01/01
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

புத்தாண்டை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க  தலதா மாளிகைக்கு இன்று (01) காலை விஜயம் செய்து வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க , மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார்.

இன்று காலை வரலாற்றுச் சிறப்பு மிக்க தலதா மாளிகைக்குச் சென்ற ஜனாதிபதி தலதா மாளிகை வளகாத்தில் நடைபெற்ற மத வழிபாடுகளில் பங்கேற்றதோடு , புத்தாண்டை முன்னிட்டு தலதா மாளிகையை தரிசிக்க வந்த மக்களுடன் சுமூகமான உரையாடலில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து,மல்வத்து விகாரைக்குச் சென்ற  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மல்வத்து மகாநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய திப்பெட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து, அவரது நலம் விசாரித்ததோடு அவருடன் சிறு கலந்துரையாடலில் ஈடுபட்டார். 

மல்வத்து மகா விஹாரையின் பிரதிப் பதிவாளர், ராஜகீய பண்டித தர்ஷனபதி வணக்கத்திற்குரிய மகாவெல ரத்தனபால நாயக்க தேரரும் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டார்.  பிரித் பாராயணம் செய்த மகாசங்கத்தினர் ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினர்.

மல்வத்து மகா விஹாரையின் அனுநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம தேரரையும் ஜனாதிபதி சந்தித்து நலம் விசாரித்தார்.

அதனை அடுத்து, அஸ்கிரி மகா விஹாரைக்கு  சென்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அஸ்கிரி மகா விஹாரையின் மகாநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரை சந்தித்து சிறு கலந்துரையாடலில் ஈடுபட்டார். 

உதயமான புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதிக்கு ஆசி தெரிவித்த அஸ்கிரி மகாநாயக்க தேரர், மக்களுக்கு  சிறந்த நாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி தலைமையிலான புதிய அரசாங்கம்  முன்னெடுக்கும் திட்டங்களை புத்தாண்டில் புதிய பலத்துடன் செயல்படுத்த வாழ்த்துத் தெரிவித்தார்.

தொடர்ந்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அஸ்கிரி தரப்பு அனுநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரரை சந்தித்து, அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட வரலாற்றில் மிக மோசமான இயற்கை அனர்த்த சவாலை எதிர்கொள்ள அரசாங்கம் செயல்படுத்திய திட்டம் குறித்து ஜனாதிபதி மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்கள் மற்றும் அனுநாயக்க தேரர்களுக்கு தெளிவுபடுத்தியதோடு இந்த திட்டத்தை வெற்றிகரமாக தொடர்வதற்கு மகாசங்கத்தினர்  தமது ஆசிகளைத் தெரிவித்தனர்.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்க உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

May be an image of temple and text

May be an image of temple

May be an image of temple

May be an image of temple and text

May be an image of one or more people, crowd, temple and text

May be an image of one or more people and crowd

Related

Tags: anura kumara dissanayakeஅநுரகுமார திசாநாயக்கதலதா மாளிகை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கைதுசெய்யப்பட்ட இலங்கை பேராசிரியரை பணிநீக்கிய அமெரிக்க பல்கலைக்கழகம்!

Next Post

விரைவில் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்!

Related Posts

“சமூக சக்தி”  தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்
இலங்கை

2026-03-30
காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

கெஹெலிய காலத்து கொள்வனவுகள் குறித்து வெளிவரப்போகும் ‘தடவியல்’ அறிக்கை.

நெற்செய்கைக்கு மாத்திரம் யூரியா உரத்தை வழங்க விவசாய அபிவிருத்தி திணைக்களம் தீர்மானம்

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

GMOA நாளை நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம்!

2026-03-30
உளவு குற்றச்சாட்டுக்காக மூத்த பிரிட்டிஷ் தூதரை வெளியேற்றிய ரஷ்யா!
இங்கிலாந்து

உளவு குற்றச்சாட்டுக்காக மூத்த பிரிட்டிஷ் தூதரை வெளியேற்றிய ரஷ்யா!

2026-03-30
Next Post
விரைவில் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்!

விரைவில் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்!

சத்யபிரமானத்துடன் யாழ் போதனாவைத்தியசாலையில் கடமைகள் ஆரம்பம்!

2026ஆம் ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ பொது சேவை உறுதிமொழி நிகழ்வு!

2026 ஆம் ஆண்டின் முதல் அதிசயம்: வூல்ஃப் சூப்பர் மூனை காணத் தயாராகுங்கள்!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
“சமூக சக்தி”  தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

“சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

0
காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

0
குவைத்தில் பயங்கரம்: ஈரான் நடத்திய தாக்குதலில் ராமநாதபுரம் தொழிலாளி பரிதாப பலி

கனடாவில் விமானப் பயணிகளின் உரிமைகள்: புதிய மாற்றங்களும் தீவிரமடையும் விவாதங்களும்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.