மாவனல்லை பொலிஸ் பிரிவுக்குட்ட கொண்டேனிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் நேற்று (01) மாலை நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் விளைவாக மூவர் உயிரழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவதாக மாவனல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர்கள் 52, 57 மற்றும் 66 வயதுடைய மாவனல்லை, கொண்டேனிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேநேரம், சம்பவத்தில் காயமடைந்த 35 வயதுடைய மற்றொரு நபர் மாவனெல்ல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவத்துடன் தொடர்புடைய 33 வயதான சந்தேக நபர் கொண்டேனிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் சந்தேக நபர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மாவனல்லை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனெல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.














