கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் மூலமாக 285 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான அபராதங்களை வசூலித்துள்ளதாக நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட 21,000 சோதனைகளுக்குப் பின்னர் இந்த அபராதங்கள் வசூலிக்கப்பட்டதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
தேவையான தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக 223 உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களின் மாதிரிகளை பரிசோதனை செய்யவும் CAA நடவடிக்கை எடுத்துள்ளது.
‘1977’ நுகர்வோர் முறைப்பாடுகள் ஹாட்லைன் மூலம் கடந்த ஆண்டு 5,002 முறைப்பாடுகள் பெறப்பட்டதாக அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.
அதன்படி, பெறப்பட்ட முறைப்பாடுகளில் சுமார் 79% தீர்க்கப்பட்டுள்ளன என்றும் CAA மேலும் கூறியது.












