எண்ணெய் வளம் மிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவுக்கு அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து ஆழ்ந்த நிச்சயமற்ற தன்மையைத் தூண்டியுள்ளது.
இந்த நிலையில், ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைப்பற்றியதன் மூலம், அந்நாட்டு அரசாங்கம் அவருக்கு ஆதரவாக இருக்கும் என்று ஞாயிற்றுக்கிழமை (04) வெனிசுலாவின் ஒரு உயர் அதிகாரி அறிவித்தார்.
தற்சமயம் போதைப்பொருள் குற்றச்சாட்டில் திங்கட்கிழமை (05) நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்தப்படுவதற்காக நிக்கோலஸ் மதுரோ நியூயார்க் தடுப்பு மையத்தில் காத்திருக்கிறார்.
இந்த நிலையில், மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸின் தடுப்புக்காவல்களை ஒரு கடத்தல் என்று மதுரோவின் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
“இங்கே, புரட்சிகரப் படையின் ஒற்றுமை உறுதி செய்யப்பட்டுள்ளது, இங்கு ஒரே ஒரு ஜனாதிபதி மட்டுமே இருக்கிறார், அவர் பெயர் நிக்கோலஸ் மதுரோ மோரோஸ்.
எதிரிகளின் ஆத்திரமூட்டல்களுக்கு யாரும் விழ வேண்டாம் என்று உள்துறை அமைச்சர் டியோஸ்டாடோ கபெல்லோ ஆளும் PSUV சோசலிசக் கட்சியால் வெளியிடப்பட்ட ஆடியோ பதிவில் கூறினார்.
சனிக்கிழமையன்று 63 வயதான மதுரோவின் கண்கள் கட்டப்பட்டு கைவிலங்கு போடப்பட்ட படங்கள் வெனிசுலா மக்களை திகைக்க வைத்தன.

37 ஆண்டுகளுக்கு முன்பு பனாமா படையெடுப்பிற்குப் பின்னர், லத்தீன் அமெரிக்காவில் வொஷிங்டனின் மிகவும் சர்ச்சைக்குரிய தலையீடு இதுவாகும்.
அமெரிக்க தாக்குதலில் வீரர்கள், பொதுமக்கள் மற்றும் மதுரோவின் பாதுகாப்புப் பிரிவின் “பெரும் பகுதியினர்” கொல்லப்பட்டதாகக் குறிப்பிட்ட விவரங்களை வழங்காமல் வெனிசுலாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் விளாடிமிர் பட்ரினோ அரசு தொலைக்காட்சியில் கூறியுள்ளார்.
வெனிசுலாவின் இறையாண்மையை உறுதி செய்வதற்காக அதன் ஆயுதப் படைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, எண்ணெய் அமைச்சராகவும் பணியாற்றும் துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், வெனிசுலாவின் உயர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் நாட்டின் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
எனினும், மதுரோ ஜனாதிபதியாகவே நீடிக்கிறார் என்று அவர் கூறியுள்ளார்.
தனியார் துறையுடனான தொடர்புகள் மற்றும் நாட்டின் முக்கிய வருவாய் ஆதாரமான எண்ணெய் பற்றிய ஆழமான அறிவு காரணமாக, ரோட்ரிக்ஸ் நீண்ட காலமாக மதுரோவின் உள் வட்டத்தில் மிகவும் நடைமுறைக்கு ஏற்ற உறுப்பினராகக் கருதப்படுகிறார்.
ஆனால் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ட்ரம்ப் கூறியதை அவர் பகிரங்கமாக மறுத்துள்ளார்.
இரண்டாவது தாக்குதல் குறித்து டரம்ப் எச்சரிக்கை
வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டை “சரிசெய்ய” நிர்வாகத்தில் எஞ்சியுள்ள உறுப்பினர்கள் ஒத்துழைக்கவில்லை என்றால், அமெரிக்கா அதன் மீது இரண்டாவது இராணுவத் தாக்குதலை நடத்தக்கூடும் என்று அஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை (04) எச்சரித்தார்.
ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களிடம் ட்ரம்ப் கூறிய கருத்துக்கள் லத்தீன் அமெரிக்காவில் மேலும் அமெரிக்க இராணுவத் தலையீடுகளுக்கான சாத்தியக்கூறுகளை எழுப்பின.
மேலும் அமெரிக்காவிற்கு சட்டவிரோத போதைப்பொருள் ஓட்டத்தை குறைக்காவிட்டால் கொலம்பியாவும் மெக்சிகோவும் இராணுவ நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் பரிந்துரைத்தன.
மதுரோ விவகாரம் குறித்து ஐ.நா.வில் கவனம்
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைப்பற்றியதன் சட்டபூர்வமான தன்மை திங்களன்று (04) ஐக்கிய நாடுகள் சபையில் கவனத்தை ஈர்க்கும்.
ஆனால் லத்தீன் அமெரிக்க நாட்டில் அதன் இராணுவ நடவடிக்கை குறித்து வொஷிங்டன் நட்பு நாடுகளிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
ரஷ்யா, சீனா மற்றும் பிற வெனிசுலா நட்பு நாடுகள் அமெரிக்கா சர்வதேச சட்டத்தை மீறுவதாக குற்றம் சாட்டியுள்ளன.
ஆனால் அமெரிக்க நட்பு நாடுகள் – அவர்களில் பலர் மதுரோவை எதிர்த்தனர் – இராணுவ பலத்தைப் பயன்படுத்துவது குறித்த எந்தவொரு கவலையும் பற்றி குறைவாகவே குரல் கொடுத்துள்ளனர்.
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், அமெரிக்க நடவடிக்கையை ஒரு ஆபத்தான முன்னுதாரணமாக கருதுகிறார், என்று அவரது செய்தித் தொடர்பாளர் சனிக்கிழமை தெரிவித்தார்.
பல சட்ட வல்லுநர்களும் அமெரிக்க நடவடிக்கை சட்டவிரோதமானது என்று கூறுகிறார்கள்.


















