வட இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இன்று (05) அதிகாலை 5.4 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகாலை 4:17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி அசாமின் மோரிகான் மாவட்டத்திற்கு அருகில் பதிவாகியதாக நாட்டில் நிலநடுக்க நடவடிக்கைகளை கண்காணிக்கும் இந்திய அரசின் நோடல் நிறுவனமான தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.
மத்திய அசாமின் மோரிகான் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்கள் உட்பட பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
இதனால் மக்கள் பீதியடைந்தனர், மக்கள் குளிர் மற்றும் அடர்ந்த மூடுபனி சூழ்நிலைகளுக்கு மத்தியில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
இருப்பினும் நிலநடுக்கத்தினால் உண்டான உயிர் இழப்பு அல்லது சொத்து சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இதுவரை பெறப்படவில்லை.


















