(Ruben Amorim ) ரூபென் அமோரிம் (Manchester United) மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து நீக்கப்பட்டமை, அந்த அமைப்பின் (கிளப்பின்) நிர்வாகச் சிக்கல்களையும் மற்றும் (Sir Jim Ratcliffe) சர் ஜிம் ராட்க்ளிஃப் தலைமையிலான புதிய அதிகார அமைப்பின் தோல்விகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
களத்தில் மோசமான ஆட்டத்திறன் மற்றும் தோல்விகள் ஒருபுறமிருக்க, தனது அதிகாரத்தை உயர்த்தக் கோரி (Ruben Amorim ) ரூபென் அமோரிம் நிர்வாகத்துடன் மோதியமையே அவரது பணிநீக்கத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அமோரிமின் பதவிக்காலத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி எந்தவொரு கோப்பையையும் வெல்லத் தவறியதோடு, புள்ளிப்பட்டியலிலும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
இது போன்ற தொடர்ச்சியான தோல்விகளால் கிளப்பின் பணியாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவி வருகிறது.
தற்போது ஒரு நிலையான பயிற்சியாளரைத் தேடும் அந்த அமைப்பு (கிளப்), நிதி ஒதுக்கீடு மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான கடுமையான சவால்களை எதிர்கொண்டு நிற்கிறது.
இதேவேளை, இந்த சூழலானது குறித்த புகழ்பெற்ற கால்பந்து அமைப்பு (கிளப்) சந்திக்கும் மிக மோசமான நிர்வாகச் சரிவை மிகத்தெளிவாக விளக்குகிறது.


















