இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல் நலக்குறைவால்,புது டில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா இன்று (06) டில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனைக்கு உடல்நலக்குறைவு காரணமாக அழைத்து வரப்பட்டார்.
அவர் வழமையான பரிசோனைக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் பரிசோதித்த வைத்தியர்கள் , மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
தற்போது மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு அங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வைத்தியர்களின் தீவிர கண்காணிப்பில் சோனியா காந்தி இருக்கிறார் எனவும் உடல் நலத்தில் பெரிய சிக்கல் ஏதும் இல்லை என்றும் சிகிச்சைக்கு பின்னர் அவர் விடுவிக்கப்படுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.















