சுமார் 24 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதை பொருட்களுடன் இரண்டு போதை பொருள் வர்த்தகர்கள் காத்தான்குடி பொலிசாரினால் நேற்றிரவு(5) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 100 கிராம் ஐஸ் மற்றும் 10 கிராம் ஹிரோயின் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கொழும்பிலிருந்து போதை பொருட்களை கடத்தி வந்து கல்லடியில் உள்ள விடுதியொன்றில் வைத்து விற்பனை செய்து வரும் குறித்த நபர்கள் பிரபல போதை வியாபாரிகள் என தெரிவிக்கப்படுகிறது.
கல்லடியிலிருந்து சம்மாந்துறைக்கு குறித்த போதைப் பொருட்களை எடுத்துச் சென்ற நிலையில் பொலிசாரினால் இவர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.
போதைப் பொருட்களை கடத்துவதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த நபர்கள் வாழைச்சேனை பகுதியை சேர்ந்த 26 மற்றும் 29 வயதுடைய நபர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பொலிசார் கொண்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


















