கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 50 கிலோ கிராம் குஷ் ரக போதைப்பொருட்களுடன் மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதியானது 500 மில்லியன் ரூபா என விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
25 முதல் 27 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள், பேங்கொக்கிலிருந்து வந்த விமானம் மூலமாக விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.














