கடுமையான பனிப்பொழிவு மற்றும் பனிமூட்டமான வானிலை காரணமாக ஐரோப்பா முழுவதும் பரவலான பயணத் தடை ஏற்பட்டுள்ளது.
கண்டத்தில் வானிலை தொடர்பான அசம்பாவித சம்பவங்களில் மொத்தம் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரான்சின் இரண்டு தனித்தனி பகுதிகளில் பனிமூட்டமான வானிலையால் இடம்பெற்ற வாகன விபத்தில் 05 பேர் உயிரிழந்தனர்.
அதே நேரத்தில் போஸ்னியாவின் தலைநகர் சரஜெவோவில் 16 அங்குலம் (40 செ.மீ) பனிப்பொழிவு ஏற்பட்டதில் ஒரு பெண் உயிரிழந்தார்.
இதேவேளை, கடுமையான பனி மூட்டமன வானிலையால் ஐரோப்பா முழுவதும் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான பயணிகள் பாரிஸ் மற்றும் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கின்றனர்.
புதன்கிழமை (07) வரை இடையூறு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.















