ரஷ்யாவுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால், உக்ரேனில் படைகளை நிலைநிறுத்துவதற்கான பிரகடனத்தில் பிரான்சுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) அறிவித்துள்ளார்.
பாரிஸில் உக்ரேனின் நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், எதிர்கால படையெடுப்பைத் தடுக்க இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் “உக்ரேன் முழுவதும் இராணுவ மையங்களை நிறுவும்” என்றும் அவர் கூறினார்.
அதேநேரத்தில், பின்னர் உக்ரேனில் ஆயிரக்கணக்கான படையினர் நிறுத்தப்படலாம் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறினார்.
உக்ரேனுக்கான வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களை நேச நாடுகள் பெரும்பாலும் ஒப்புக்கொண்டன.
மேலும் ஒரு போர் நிறுத்தத்தைக் கண்காணிப்பதில் அமெரிக்கா முன்னணியில் இருக்கும் என்று முன்மொழிந்தன.
ஆனால் பிரதேசத்தின் முக்கிய பிரச்சினை இன்னும் விவாதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பிரான்ஸ் தலைநகரில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்புகள் குறித்து மொஸ்கோ இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்ன் 2022 பெப்ரவரியில் உக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கினார்.
மேலும் மாஸ்கோ தற்போது உக்ரேன் பிரதேசத்தில் சுமார் 20% கட்டுப்பாட்டில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
















