இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்டி சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரானது இன்று ஆரம்பமாகவுள்ளது.
தொடரின் முதல் போட்டியானது இன்றிரவு 07.00 மணிக்கு தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் ஆரம்பமாகும்.
பெப்ரவரி 7 ஆம் திகதி தொடங்கும் ஐசிசி டி20 உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக நடைபெற்றும் இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் ஒரு முக்கிய போட்டியாக அமைகிறது.
இரு அணிகளும் இறுதியாக கடந்த நவம்பர் மாதம் பாகிஸ்தானில் நடந்த டி20 முத்தரப்பு தொடரின் போது சந்தித்தன.
அங்கு பாகிஸ்தான் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணி, அண்மையில் டி20 போட்டியில் நிலைத்தன்மை மற்றும் நம்பகமான துடுப்பாட்ட மையத்தைக் கொண்டிருப்பதால் இலங்கையை விட சற்று முன்னிலை வகிக்கிறது.
அதேநேரத்தில் இலங்கை அணி, சொந்த மைதானத்தில் பாகிஸ்தானை வீழ்த்துவதற்கு எதிர்பார்த்துள்ளது.
மேலும் தசூன் ஷானக்கவின் தலைமைத்துவ பொறுப்பும் அணிக்கு வலுச்சேர்க்கிறது.
எனினும், இலங்கை அணியின் நடுத்தர துடுப்பாட்ட வரிசையானது கேள்விக்குறியாகவே உள்ளது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இதுவரை 24 டி20 போட்டிகளில் மோதியுள்ளன.
பாகிஸ்தான் அணி 14 போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது.
இலங்கை அணி 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.


















