அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த 2024 ஆம் ஆண்டுக்கு பெப்ரவரிக்குப் பின்னர் முதன்முறையாக 310 ரூபாவினை விஞ்சியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதியானது இன்று (07) 306.28 ரூபாவாக காணப்படுகின்றது.
அதேநேரம், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதியானது இன்று 313.81 ஆக உள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

















