போதை பொருள் வாங்குவதற்கு பணம் தேவைக்காக 14 வயது சிறுமியான மகளின் கையில் இருந்த தங்க வளையலை கழட்டி தருமாறு அடித்து தாக்கியதில் சிறுமி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து தந்தையை கைது செய்து பின்னர் எச்சரித்து விடுவித்த சம்பவம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (05) காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மாவிலங்குதுறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ள நிலையில் அதனை வாங்குவதற்கு பணம் இல்லாததையடுத்து 14 வயது சிறுமியான அவரது மகளின் கையில் இருந்த 3 பவுண் நிறை கொண்ட தங்க வளையலை கழட்டி தருமாறு கோரியுள்ளார்.
இதனையடுத்து குறித்த சிறுமி அதனை கழட்டி கொடுத்ததையடுத்து சிறுமியை அடித்து தாக்கியதில் சிறுமி காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டதுடன் இது தொடர்பாக பொலிசாருக்கு முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த நபரை பொலிசார் கைது செய்ய சென்ற போது பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அவரை கைது செய்தனர்
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி தந்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொலிசாரிடம் கோரியதை அடுத்து கைது செய்தவரை பொலிசார் எச்சரித்து விடுவித்தனர்.















