(Greater Manchester) கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்கள், அந்தந்தப் பகுதிகளுக்கு வெளியே வசிப்பவர்கள் இறக்கும் போது அவர்களின் அடக்கச் சடங்குகளுக்கு அதிகப்படியான கட்டணத்தை வசூலிப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனை ஒரு “துயர வரி” என்று விமர்சிக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களும் இறுதிச் சடங்கு இயக்குநர்களும், அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான கட்டண முறையை அமுல்படுத்தக் கோரி போராடி வருகின்றனர்.
மக்கள் தங்கள் விருப்பமான இடங்களிலோ அல்லது குடும்ப உறுப்பினர்களின் அருகிலோ நல்லடக்கம் செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த கூடுதல் நிதிச் சுமை அமைந்துள்ளதாக அவர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், தங்கள் பகுதியில் வசிப்பவர்களுக்காக குறைந்த இடவசதியைப் பாதுகாக்கும் நோக்கிலேயே இத்தகைய தள்ளுபடி விலையை வழங்குவதாக நகர சபைகள் நியாயப்படுத்துகின்றன.
தற்போது (Wigan) விகான் மட்டுமே எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் பொதுவான கட்டணத்தை வசூலிக்கும் ஒரே பகுதியாகத் திகழ்வதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த முரண்பாடான கொள்கைகளால் பல குடும்பங்கள் கடன் மற்றும் குற்ற உணர்ச்சிக்கு தள்ளப்படுவதாக கவலை தெரிவிக்கின்றன.















