வீரமுனை வளைவுக் கோபுரம் அமைப்பது தொடர்பான வழக்கு இன்றைய தினம் சமாந்துறை நீதவான் நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டிருந்து.
இந்த வழக்கில் ஏற்கனவே ஜனாதிபதி சட்டத்தரணிகள் தோன்றி இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானமாக முடிவுறுத்துவதற்கான நடவடிக்கையினை சுமூகமாக செய்வதாக மன்றுக்கு அளித்திருந்த வாக்குறுதிகளின் அடிப்படையில் அதனை சுமூகமாக தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இருந்த போதிலும் அதன் நடைமுறைகளில் இன்னும் தொங்கு நிலை காணப்படுகின்ற காரணத்தினால் நீதிமன்றமானது எதிர்வரும் மார்ச் மாதம் ஆறாம் தேதிக்கு முன்பதாக நாங்கள் இந்த இரு தரப்பினருடனும் கதைத்து பிரதேச சபை மற்றும் ஆலய நிர்வாகம் விண்ணப்பதாரர்கள் அனைவரும் கதைத்து பிரச்சனையினை சுமூகமாக தீர்க்க வேண்டும் என்பதை நீதிமன்றம் வேண்டி இருக்கிறது.
நீதிமன்றத்தின் பணிப்புரைக்கு அமைய அதுவரை காலமும் இருந்தது இருந்தபடியாகவே இருக்கக வேண்டும் என அனைத்து தரப்பினர்களுக்கும் நிறுவப்பட்டிருக்கிறது.
அதேவேளை இந்த இரு தரப்பினரும் வழக்கினை சுமூகமாக முடிக்க வேண்டும். இது ஒரு பொதுநலன் சார்ந்த விடயமாக இருக்கின்றதனால் நீதிமன்றம் இந்த பணிப்புரையை வழங்கி இருக்கின்றது. எதிர்வரும் வழக்கு திகதிக்குமுன் இது சம்பந்தமான முறைப்பாட்டாளர்கள் மற்றும் பிரதிவாதிகள் இது தொடர்பில்பேசி ஒரு நல்ல முடிவினை நீதிமன்றத்திற்கு அறிவிப்பார்கள் என்ற அடிப்படையில் நீர் மன்றம் இதனை தெரிவித்துள்ளது என இவ்வளக்கில் ஆஜராகிய சட்டத்தரணி அ.நிதான்சன் தெரிவித்தார்.















