கோரெட்டி புயலின் கோரத்தாண்டவத்தைத் தொடர்ந்து, இங்கிலாந்து முழுவதும் கடும் பனிப்பொழிவு மற்றும் மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளதாக அந்நட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை எதிர் வரும் வார இறுதியில் வானிலை மேலும் மோசமடையும் என்பதால், பொதுமக்களுக்குப் புதிய மஞ்சள் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
கடும் குளிரால் நாட்டின் பல பகுதிகளில் ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன.
இதேவேளை, இன்று ஓரளவு தெளிவான வானிலை நிலவினாலும், நாளை மீண்டும் மழை மற்றும் பனி பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
















