அநுராதபுரம் கலென்பிந்துனுவெவ, பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக நபர் ஒருவரினால் தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 15 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளார்
இதேவேளை இந்த சம்பவத்தில் ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த தாய் தந்தை மற்றும் அவர்களது இரண்டு புதல்விகள் உயிரிழந்துள்ளனர்.
அநுராதபுரம் கலென்பிந்துனுவெவ, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படிகாரமடுவ பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த 6 ஆம் திகதி குடும்ப தகராறு காரணமாக தந்தை ஒருவர் தனது வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீமூட்டிய சம்பவம் இடம்பெற்றிருந்தது
இதன்போது 43 வயதுடைய தந்தையும் 13 வயதுடைய மகளும் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த அனர்த்தம் இடம்பெற்ற போது வீட்டில் இரண்டு மகள்கள், மனைவி மற்றும் மனைவியின் தாய் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த நபரின் மனைவி மற்றும் அவரது இரண்டு மகள்மார் உள்ளிட்ட ஐவர் தீவிபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த 15 வயதுடைய புதல்வி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 66 வயதுடைய வயயோதிப பெண் ஒருவரும் 20 வயதுடைய யுவதியும் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்றவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது














