இங்கிலாந்தின் எசெக்ஸின் A130 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வாகன விபத்தின் போது, மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவ உதவியாளர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மீது மற்றொரு வாகனம் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில், ஒரு பொலிஸ் அதிகாரியும் ஒரு மருத்துவரும் தற்போது கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் மூன்று நபர்களைக் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டு தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன, மேலும் விபத்து குறித்த ஆதாரங்கள் மற்றும் காணொளிகளை பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.
அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் காவல் துறைத் தலைவர்கள் காயமடைந்தவர்களுக்குத் தங்களது ஆறுதலையும் ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
















