கூகுள் நிறுவனத்தின் முன்னாள் மூத்த அதிகாரி (Victoria Woodall) விக்டோரியா வுடால் என்பவர் சக ஊழியரின் பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளித்த பின்னர் பழிவாங்கும் நடவடிக்கைகளை தான் எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
அவர் முன்வைத்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட மேலாளர் பணிநீக்கம் செய்யப்பட்டாலும், அதன் விளைவாகத் தனக்குச் சாதகமற்ற சூழலை உருவாக்கித் தன்னை பணிநீக்கம் செய்ததாக அவர் குற்றம் சாட்டுகிறார்.
இதேவேளை, கூகுள் நிறுவனம் இந்தப் புகார்களை மறுப்பதோடு, இது சாதாரண வணிகக் கட்டமைப்பு மாற்றத்தால் ஏற்பட்ட பணிநீக்கம் என்றும், பழிவாங்கும் நோக்கம் இதில் இல்லை என்றும் வாதிடுகிறது.
மேலும், இந்த வழக்கில் கூகுள் நிறுவனத்தின் ஆணாதிக்கக் கலாச்சாரம் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பற்ற சூழல் குறித்த முக்கிய விவாதங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
தற்போது இந்த விவகாரம் தொடர்பான இறுதித் தீர்ப்பை இங்கிலாந்து நீதிமன்றம் எதிர்பார்க்கிறது.














