இங்கிலாந்தில் நிலவும் கோரெட்டி புயல் மற்றும் தீவிர வானிலை மாற்றங்கள் காரணமாக இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து உள்ளிட்ட பகுதிகளுக்கு கடுமையான பனிப்பொழிவு குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிகை விடுத்துள்ளது.
குறிப்பாக, ஸ்காட்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதேவேளை, பனி உருகுவதாலும் பெய்யும் கனமழையாலும் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தப் புயலால் ஏற்கனவே உயிரிழப்புகள், பாடசாலை விடுமுறைகள் மற்றும் போக்குவரத்து தடைகள் போன்ற அசம்பாவிதங்கள் நிகழ்ந்துள்ளன.
வார இறுதி மற்றும் திங்கட்கிழமை வரை நீடிக்கவிருக்கும் இந்த அபாயகரமான வானிலை காரணமாக பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதன் விளைவாக, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.














