இங்கிலாந்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க டவர் ஆஃப் லண்டன் (Tower of London) பகுதிக்கு அருகில் சீனா தனது மிகப்பெரிய தூதரகத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்த பிரம்மாண்டமான கட்டிடத்தின் அடியில் உள்ள ரகசிய நிலத்தடி அறைகள் மற்றும் நிதித் தரவுகளைக் கடத்தும் கேபிள்களுக்கு அருகில் இவை அமைந்திருப்பது பெரும் பாதுகாப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீன உளவுத்துறையின் ஊடுருவல் மற்றும் உளவு பார்க்கும் அபாயம் இருப்பதாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எச்சரித்தும், அந்நாட்டு அரசு இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முன்வந்துள்ளது.
தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இந்தத் திட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
இங்கிலாந்து மற்றும் சீன நாடுகளுக்கு இடையே ஏற்கனவே உளவு பார்த்தல் தொடர்பான பதற்றம் நீடிக்கும் சூழலில், இந்தத் தூதரக விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.















