இங்கிலாந்தின் (Lord Mayor’s Treloar’s College) லார்ட் மேயர் ட்ரெலோயர் கல்லூரியில் பயின்ற ரத்தப்போக்கு குறைபாடுள்ள சிறுவர்கள் மீது, அவர்களின் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட ஆபத்தான மருத்துவ பரிசோதனைகளால் அவர்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.
கடந்த 1970-களில் தொடங்கி பல தசாப்தங்களாக நடந்த இந்தச் சோதனைகளால் பல மாணவர்கள் எச்.ஐ.வி (HIV) மற்றும் கல்லீரல் அழற்சி (Hepatitis) போன்ற கொடிய நோய்த்தொற்றுகளுக்கு உள்ளாகினர்.
இதேவேளை, இந்த சம்பவத்திற்கு இழப்பீடாக அரசு அறிவித்துள்ள தொகை மிகவும் சொற்பமானது என்றும், இது பாதிக்கப்பட்டவர்களின் உயிரையும் வலியையும் அவமதிப்பதாக உள்ளதென்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் மருத்துவர்கள் திட்டமிட்டே இத்தகைய ஆபத்தான ஆராய்ச்சிகளை மேற்கொண்டதாகக் கூறப்படும் நிலையில், முறையான நீதி வேண்டி பாதிக்கப்பட்டவர்கள் மாற்றும் அவர்களின் குடும்பத்தினர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இழந்த உயிர்களுக்கும் சிதைக்கப்பட்ட எதிர்காலத்திற்கும் ஈடாக அரசு வழங்கும் நிதி போதுமானதாக இல்லை என்பதை வலியுறுத்தியே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்















