கடந்த 2008 ஆம் ஆண்டு லண்டனில் 16 வயது சிறுவன் ஜிம்மி மிசனைக் கொலை செய்த ஜேக் ஃபஹ்ரி,(Jake Fahri) சிறையிலிருந்து விடுதலையான பின்னர் தனது குற்றத்தைப் பெருமையாகப் பேசி இசை வெளியிட்ட காரணத்தால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நீதி, பாதிக்கப்பட்ட இளைஞனின் பெற்றோருக்கு நீதி வழங்கும் வகையிலும், குற்றவாளியின் வன்முறையான அணுகுமுறையை கட்டுப்படுத்தவும் ஜேக் ஃபஹ்ரிக்கு இடமாற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் தன்னை ஒரு ராப் கலைஞர் என்று அடையாளப்படுத்திக் கொண்டு, பாதிக்கப்பட்டவரின் மரணத்தை இழிவுபடுத்தும் வகையில் பாடல்களைப் பாடியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நன்னடத்தை விதிகளை மீறியதால் குறைந்த பாதுகாப்பு கொண்ட சிறைக்கு மாற அனுமதி வழங்கப்பட்ட நிலையில், துணைப் பிரதமர் டேவிட் லாமி தலையிட்டு அந்த மாற்றத்தைத் தடுத்து நிறுத்தினார்.
இதனிடையே குற்றவாளியின் குணநலன்களில் மாற்றம் ஏற்படவில்லை என்பதையும், அவர் அதிகாரிகளிடம் உண்மையை மறைத்ததையும் சுட்டிக்காட்டியும் இந்த இடமாற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மகனை இழந்த ஜிம்மியின் பெற்றோர் இந்த முடிவை வரவேற்றுள்ளதோடு, சமூகத்தில் அமைதி மற்றும் மன்னிப்பை வளர்க்கத் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
















