மேற்கு பங்களத்தேஷின் ஹவுரா, அசாமின் குவஹாத்தி இடையிலான, ‘ஸ்லீப்பர்’ எனப்படும், படுக்கை வசதியுடன் கூடிய முதல் வந்தே பாரத் ரயில் சேவையை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆரம்பித்து வைத்தார்.
நாடு முழுதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், 170க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
பகல் நேரங்களில் மட்டுமே இயக்கப்படும் இந்த ரயிலுக்கு, பயணியர் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து, ‘ஸ்லீப்பர்’ எனப்படும் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு கோரிக்கைகள் குவிந்தன.
இதை ஏற்ற மத்திய அரசு, படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்களை தயாரித்தன.
மேற்கு பங்களாதேஷ் மற்றும் வடகிழக்கு மாநிலமான அசாம் இடையே, படுக்கை வசதியுடன் கூடிய முதல் வந்தே பாரத் ரயில் சேவையை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டு, இதற்கான சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது.
இந்நிலையில், மேற்கு பங்களாதேஷில் மால்டா நகர் ரயில் நிலையத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இங்குள்ள ஹவுரா மற்றும் அசாமின் குவஹாத்தி இடையிலான ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் சேவையை, பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்தார்.
முன்னதாக, ரயிலில் ஏறி ஆய்வு செய்த பிரதமர் மோடி, ரயில் ஓட்டுநர் மற்றும் அதில் பயணித்த மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.பின், மறுமார்க்கநிகழ்நிலை ‘ வாயிலாக ஆரம்பித்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து, மேற்கு பங்களாதேஷில் நியூ ஜல்பைகுரி – நாகர்கோவில், நியூ ஜல்பைகுரி – திருச்சி, அலிபுர்துவார் – பெங்களூரு, அலிபுர்துவார் – மும்பை இடையிலான நான்கு அம்ரித் பாரத் ரயில்களையும் பிரதமர் ஆரம்பித்து வைத்தார்.














