11 பயணிகளுடன் நேற்றையதினம் மாயமான இந்தோனேசிய விமானத்தின் சிதைவுகளை அந்த நாட்டு அதிகாரிகள் இன்று கண்டுபிடித்துள்ளனர்.
அதன்படி, குறித்த விமானத்தின் சிதைவுகள் இந்தோனேசியாவின் தெற்கு சுலாவேசியில் உள்ள புலுசரவுன் மலையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, விமானத்தின் சிதைவுகள் மீட்கப்பட்ட போதிலும், அதில் பயணித்தவர்கள் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகாத நிலையில் அவர்களைத் தேடி இந்தோனேசிய அதிகாரிகள் விசேட தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் ATR 42-500 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்பிடி அமைச்சகத்திற்குச் சொந்தமானது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியாவின் மக்காசர் நகருக்கு அருகாமையில் குறித்த விமானம் நேற்று (17) மாயமான போது அதில் 11 பேர் இருந்துள்ளனர்.

















