நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் குறிப்பிட்ட கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா அல்லது ஒவ்வொரு உறுப்பினரின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறதா என்பது குறித்து இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு நாடாளுமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளதாக ஆங்கில செய்திச் சேவையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு பொது நிதியிலிருந்து மாதாந்திர கொடுப்பனவுகள் அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும், இது ஊழலுக்குச் சமமானதாகவும் குற்றம் சாட்டி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தாக்கல் செய்த முறைப்பாட்டினைத் தொடர்ந்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி கம்மன்பில இது தொடர்பில் முறைப்பாடு அளித்தமையும் குறிப்பிடத்தக்கது.















