கிரீன்லாந்து மீதான டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தல்களை அடுத்து, பிரித்தானிய மண்ணிலிருந்து அமெரிக்க இராணுவ தளங்களை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்து இங்கிலாந்து அரசாங்கம் விரைவாக ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று லண்டன் சட்டமன்ற உறுப்பினர் சாக் போலன்ஸ்கி ( Zack Polanski) கூறியுள்ளார்.
அத்துடன், அமெரிக்க நிறுவனமான பலந்திருடனான 240 மில்லியன் பவுண்ட்ஸ் ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும், பாதுகாப்பு உத்தியின் பரந்த மதிப்பாய்வின் மத்தியில் அணு ஆயுதங்களை நம்பியிருப்பதைக் குறைக்க வேண்டும்.
அத்துடன், அமெரிக்க இராணுவ ஒத்துழைப்பை நம்பியிருப்பதிலிருந்து பிரித்தானியா தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்றும் இங்கிலாந்து அரசாங்கத்திற்கு பசுமைக் கட்சியின் தலைவவர் சாக் போலன்ஸ்கி அழைப்பு விடுத்தார்.
கிரீன்லாந்தை வாங்க அனுமதிக்காவிட்டால், தனது சொந்த பங்காளி நாடுகளுக்கு வரி விதிப்பதாக ட்ரம்ப் விடுத்துள்ள அச்சுறுத்தல்களுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து ஐரோப்பிய தலைவர்கள் போராடி வரும் வேளையில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி 1 முதல் அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் எந்தவொரு பொருட்களுக்கும் இங்கிலாந்து, டென்மார்க், நோர்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு 10% வரி விதிக்கப்படும் என்றும், கிரீன்லாந்து தொடர்பாக ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை ஜூன் 1 முதல் அந்த வரி 25% ஆக அதிகரிக்கும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.

















