தனியார் துறை ஊதிய உயர்வுகளில் ஏற்பட்ட கூர்மையான மந்தநிலையைத் தொடர்ந்து, 2025 செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் இங்கிலாந்தின் தொழில் சந்தை கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் இன்று (20) தெரிவித்துள்ளன.
தனியார் வணிகங்களில் பணியமர்த்தப்படுபவர்களின் ஊதிய வளர்ச்சியின் வேகம் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகக் குறைந்த விகிதமாகக் வீழ்ச்சி கண்டுள்ளதாக தேசிய புள்ளிவிவர அலுவலகம் (ONS) தெரிவித்துள்ளது.
அந்த தகவலின்படி, 2025 டிசம்பர் மாதத்தில் சம்பளப் பட்டியலில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை 2025 நவம்பர் மாதத்தை விட 43,000 குறைந்து 30.2 மில்லியனாக வீழ்ச்சி கண்டுள்ளது.
இது 2020 நவம்பர் மாதத்துக்குப் பின்னர் மிகப்பெரிய மாதாந்திர சரிவாகும்.
கடந்த ஆண்டு நவம்பர் இறுதி வரையிலான மூன்று மாதங்களில் வேலையின்மை விகிதம் நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5.1% ஆக இருந்தது – ஆனால் இது ஒரு வருடத்திற்கு முன்பு 4.4% ஆக இருந்தது.
வேலைப் பிரச்சினைகளால் சில்லறை விற்பனை நிலையம் மற்றும் விருந்தோம்பல் துறைகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்கள்.
குறிப்பாக விருந்தோம்பல் துறையில், சம்பளம் பெறும் ஊழியர்களின் எண்ணிக்கை ஒரு வருடத்தில் 70,000 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.
நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸின் கடந்த நவம்பர் மாத வரவுசெலவுத் திட்ட உரையினைத் தொடர்ந்து வரி உயர்வுகள், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் குறைந்தபட்ச ஊதிய உயர்வுகள் ஆகியவற்றுக்கு மத்தியில் இந்த வீழ்ச்சி இங்கிலாந்தில் பதிவாகியுள்ளது.












