2026 ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் பங்கேற்பது குறித்து ஐசிசி முடிவு செய்ய உள்ள நிலையில், பிராந்திய அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் இந்தியாவில் போட்டிகளில் விளையாட பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (BCB) மறுத்ததற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) முறையாக ஆதரவளித்துள்ளதாக ESPNcricinfo செய்தி வெளியிட்டுள்ளது.
பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தனது நிலைப்பாட்டினை செவ்வாயன்று (20) ஐசிசிக்கு கடிதம் மூலம் இந்த விடயத்தை தெரிவித்ததாக ESPNcricinfo செய்திச் சேவையின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, இந்தியாவில் பாதுகாப்பு காரணங்களுக்காக பங்களாதேஷின் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்ற BCBயின் கோரிக்கை குறித்து விவாதிக்க புதன்கிழமை (21) ஐசிசி வாரியக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
இதேவேளை, உலகக் கிண்ண அட்டவணையில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்றும், பங்களாதேஷின் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், இந்தியாவுடன் இலங்கை போட்டியை இணைந்து நடத்தப்படும் என்றும் ஐசிசி தொடர்ந்து கூறி வருகிறது.
கடந்த வாரம் நடைபெற்ற கலந்துரையாடல்களின் போது இந்த நிலைப்பாடு BCB-க்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இளைஞர் மற்றும் விளையாட்டு ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் செவ்வாயன்று, “இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செல்வாக்கின் கீழ்” ஐ.சி.சி நாட்டின் மீது அழுத்தம் கொடுத்தால், பங்களாதேஷ் எந்த நியாயமற்ற நிபந்தனைகளையும் ஏற்காது என்று கூறினார்.
இந்த விடயம் குறித்து விவாதிக்க ஐசிசி மற்றும் BCB ஆகியவை பல கூட்டங்களை நடத்தியுள்ளன.
அவற்றில் கடந்த வார இறுதியில் டாக்காவில் நடந்த சந்திப்பும் அடங்கும்,
ஆனால் இரு தரப்பினரும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றவில்லை.
போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெற வேண்டும் என்று ஐசிசி வலியுறுத்துகிறது.
அதே ரத்தில் BCB தனது அணியை இந்தியாவுக்கு அனுப்ப முடியாது என்று கூறுகிறது.
போட்டி தொடங்குவதற்கு மூன்று வாரங்களுக்கும் குறைவான காலத்திற்கு முன்பே, ஜனவரி 21 (இன்று) ஒரு முடிவெடுப்பதற்கான காலக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.














