டெய்லி மெயில் பத்திரிகையின் வெளியீட்டாளருக்கு எதிரான தனியுரிமை வழக்கில் லண்டன் மேல் நீதிமன்றத்தில் இன்று (21) இளவரசர் ஹரி சாட்சியமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது கடந்த மூன்று ஆண்டுகளில் பிரித்தானிய அரச குடும்ப உறுப்பினர் ஒருவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகும் இரண்டாவது சந்தர்ப்பமாகும்.
1990 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியிலிருந்து 2010 ஆம் ஆண்டுகளின் முற்பகுதி வரை தங்கள் தனியுரிமையை மீறியதாக குற்றம்சாட்டி சசெக்ஸ் டியூக் மற்றும் பாடகர் எல்டன் ஜோன் உட்பட ஆறு பேர் டெய்லி மெயிலின் வெளியீட்டாளர் அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
எனினும், அசோசியேட்டட் இந்த குற்றச்சாட்டுகளை அபத்தமானதும், அவதூறுவானதும் என்று கூறி மறுத்துள்ளது.
இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டில் பத்திரிகைகளுக்கு எதிரான மற்றொரு வழக்கின் போது நீதிமன்றத்தில் முன்னிலையாகி சாட்சியமளித்த 130 ஆண்டுகளில் முதல் அரச குடும்பத்தைச் சேர்ந்தவரான மன்னர் சார்லஸின் இளைய மகன் ஹரி, இப்போது அசோசியேட்டட் மீதான குறித்த வழக்கின் ஆரம்ப சாட்சியாக இருக்கிறார்.
இந்த நிலையிலேயே அவர் இன்று லண்டன் மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகி சாட்சியமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

















