உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் வழக்கமான பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படையின் மைக்ரோலைட் விமானம் இன்று (21) காலை விபத்துக்குள்ளானது.
விபத்தின் போது விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, வெளியேற்றப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
வழக்கமான பயிற்சி நடவடிக்கையின் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும், இதனால் தரையிலிருந்த பொது மக்களுக்கோ அல்லது வேறு எந்த சொத்துக்களுக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
அதேநேரம், இந்த சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளைக் கண்டறிய விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
















