பிரபல பாடகி ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா இன்று மாரடைப்பால் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சில திரைப்படங்களில் நடித்துள்ள முரளி கிருஷ்ணா சென்னையைச் சேர்ந்த நடன கலைஞர் உமாவை மணந்து, பின் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஹைதராபாத்தில் தன் தாய் ஜானகியுடன் வசித்து வந்த முரளி கிருஷ்ணா, இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இவரின் மறைவுக்கு ரசிகர்கள், திரைத்துறையினர் என பலரும் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
முரளி கிருஷ்ணா தெலுங்கு சினிமாவில் நடித்து வந்தார்.
அவர் நடித்ததில் விநாயகடு, 100% காதல் ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை.
















