பிரபல இந்திய நடிகர் ஆர். மாதவன் இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருதைப் பெற்றவர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
2026 குடியரசு தினத்தை முன்னிட்டு உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட இந்த விருது, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் திரைப்படத்திற்கு மாதவன் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரிக்கிறது.
விருதுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே, மாதவன் சமூக ஊடகங்களில் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
அதில் அவர்,
நான் பத்மஸ்ரீ விருதை ஆழ்ந்த நன்றியுடனும் பணிவுடனும் ஏற்றுக்கொள்கிறேன், எனக்கு வழங்கப்பட்ட இந்த மரியாதை, எனது கனவுகளுக்கு அப்பாற்பட்டது, மேலும் எனது முழு குடும்பத்தின் சார்பாகவும் இதைப் பெறுகிறேன், அவர்களின் நிலையான ஆதரவும் நம்பிக்கையும் எனது மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறது – என்றார்.
மாதவனின் திரையுலக வாழ்க்கை இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்துள்ளது.
மணிரத்னத்தின் அலை பாயுதே (2000) திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அவர் அறிமுகமானார்.
ரெஹ்னா ஹை டெர்ரே தில் மெய்ன் (2001) மூலம் போலிவுட்டில் அறிமுகமானார்.


















