கிறிஸ்துமஸ் தினத்தன்று ( Exmouth Beach)எக்மௌத் கடற்கரையில் நீந்தச் சென்றபோது காணாமல் போன இரண்டு நபர்களின் சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை, உயிரிழந்தவர்களில் ஒருவர் மற்றவரைப் பாதுகாக்க முயன்றபோது இந்த விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் இதில் உயிரிழந்த (Matthew Upham) மேத்யூ அப்ஹாம் என்பவருக்குப் பிரபல பாடகி கேட் புஷ் தனது அஞ்சலியைச் செலுத்தியுள்ளார்.
மோசமான வானிலை காரணமாகப் பல நீச்சல் நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்ட போதிலும், அன்றைய தினம் கடலில் சிக்கிய பலரை மீட்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
ஹெலிகாப்டர்கள் மற்றும் கடலோரப் பாதுகாப்புக் குழுவினர் இணைந்து மேற்கொண்ட இந்தத் தீவிரத் தேடுதல் நடவடிக்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
இதவேளை, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தமது ஆழ்ந்த இரங்கல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
உத்தியோகபூர்வ அடையாளச் சோதனைகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை என்றாலும், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















