இந்தியாவின் எரிசக்தி துறை 500 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது.
உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன் வர வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உலகளாவிய முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில், கோவாவில் 2026 இந்திய எரிசக்தி வார மாநாடு இன்று முதல் ஜனவரி 30ம் திகதி வரை நடைபெறுகிறது.
இந்த மாநாட்டை நிகழ்நிலை வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதன்போது உரையாற்றிய பிரதமர் மோடி,
இந்திய – ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உற்பத்தி மற்றும் சேவைத் துறையை ஊக்குவிக்கும் எனவும் இந்தியா விரைவில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு மையமாக உருவாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தியா அனைத்து துறைகளிலும் தொடர்ச்சியாக பல்வேறு சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது எனவும் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது எனவும் எரிசக்தித் துறையில் முதல் ஐந்து ஏற்றுமதியாளர்களில் இந்தியாவும் ஒன்று எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மேலும் இதன்போது, இந்தியாவின் எரிசக்தி துறை 500 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது. உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன் வர வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.


















