மனநல அவசரநிலைகளின் போது உடனடியாக உதவியை நாடுமாறு இலங்கையின் தேசிய மனநல நிறுவனம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
மன ரீதியான துன்பம் அல்லது நெருக்கடி சூழ்நிலைகளை அனுபவிக்கும் நபர்கள் அவசர ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுக்காக தேசிய மனநல நிறுவனத்தின் 1926 என்ற துரித இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மன நலம் தொடர்பான விடயத்தில் ஆரம்பக் கட்டத் தலையீடு கடுமையான விளைவுகளைத் தடுக்கலாம் என்பதை வலியுறுத்திய சுகாதார அதிகாரிகள் மக்கள் தொழில்முறை உதவியை நாடவும் மனநல சேவைகளை அணுகவும் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றனர்.
















