கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்துடன் இணைந்த மனித உரிமைகள் கற்கைகளுக்கான நிலையம் (CSHR) மற்றும் சட்ட உதவிப் பிரிவு ஆகியன இணைந்து கொழும்புப் பல்கலைக்கழக, சட்ட பீட, GYM வளாகத்தில் இலவச சட்ட ஆலோசனை முகாம் ஒன்றினை ஜனவரி 31 ஆம் திகதி காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை ஏற்பாடு செய்துள்ளன.
கொழும்பு வழக்கறிஞர் சங்கங்கம், மனித உரிமைகள் ஆணையம் மற்றும் சட்ட உதவி ஆணையத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில், குற்றவியல் சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்ற அனுபவம் வாய்ந்த சட்டத்தரணிகள் இந்த நிகழ்வில் பங்கேற்பதோடு பிரதேச மக்களுக்கு தொழில் ரீதியான பிரச்சினைகள், நிலத் தகராறுகள், பண மீட்பு, குடும்ப பிரச்சினைகள், சுற்றுச்சூழல் குறித்த பிரச்சினைகள், தாக்குதல்கள், கொள்ளைகள் மற்றும் பிற சட்ட பிரச்சினைகள் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்த சட்ட ஆலோசனை மற்றுமட சட்ட ஆவணங்களை வரைவதில் வழிகாட்டுதல் மற்றும் சட்ட ஆலோசனை மற்றும் தொடர்புடைய நீதி நிறுவனங்களுக்கு பரிந்துரைகள் போன்ற இலவச சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் நிதியளிக்கப்படும் JURE எனப்படும் நீதித்துறைக்கான அனுசரணை திட்டமானது, UNDP மற்றும் UNICEF உடன் இணைந்து செயற்படுத்தப்படுகிறது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படுகிறது.


















