2010-ஆம் ஆண்டில் ஜெப்ரி எப்ஸ்டீன் ஒரு பெண்ணை ராயல் லாட்ஜிற்கு ஆண்ட்ரூவிடம் அனுப்பி வைத்தார் என்ற புகாரை தேம்ஸ் வேலி (Thames Valley) காவல்துறை ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
இளவரசர் ஆண்ட்ரூ இந்தப் புதிய குற்றச்சாட்டு குறித்து இதுவரை பதில் அளிக்கவில்லை, இருப்பினும் எப்ஸ்டீன் தொடர்பான அனைத்து முறைகேடுகளையும் அவர் ஏற்கனவே மறுத்துள்ளார்.
ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் ராயல் லாட்ஜை விட்டு வெளியேறிவிட்டதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எப்ஸ்டீன் ஒரு பெண்ணை அவரிடம் அனுப்பினார் என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்க, ஆண்ட்ரூ நிரந்தரமாக நோர்போக்கிற்கு (Norfolk) இடம்பெயரும் பணிகளைத் தொடங்கியுள்ளார்.
இதேவேளை, ஆண்ட்ரூ தற்போது தற்காலிகமாக நோர்போக்கில் உள்ள சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில் (Sandringham Estate) ஒரு வீட்டில் வசித்து வருகிறார்.
எப்ஸ்டீன் தொடர்பான புகார்கள் அரச குடும்பத்தின் பணிகளுக்கு “இடையூறாக” இருந்ததால், ஆண்ட்ரூவின் பட்டங்கள் மற்றும் கௌரவங்களை நீக்கும் பணியை மன்னர் கடந்த ஒக்டோபர் மாதம் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.














