அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கஸ் மொஹமதிக்கு (Narges Mohammadi) ஈரானிய நீதிமன்றம் மேலும் ஏழரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு நகரமான மஷாத்தில் உள்ள ஒரு நீதிமன்றத்தால் மனித உரிமை ஆர்வலருக்கு கூட்டம் மற்றும் கூட்டுச் சதி செய்ததற்காக ஆறு ஆண்டுகளும், பிரசார நடவடிக்கைகளுக்காக ஒன்றரை ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக அவரது சட்டத்தரணி மொஸ்தபா நிலி ஞாயிற்றுக்கிழமை (07) சமூக ஊடகங்களில் அறிவித்தார்.
குறித்த குற்றச்சாட்டுகளுக்காக நர்கஸ் மொஹமதி கடந்த டிசம்பரில் கைது செய்யப்பட்டார்.
53 வயதான அவர் ஈரானில் பெண்கள் ஒடுக்குமுறைக்கு எதிரான செயல்பாட்டிற்காக 2023 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
















