குருணாகலில் யக்வில, தம்பாடிய பிரதேசத்தில் கடை ஒன்றின் உரிமையாளர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
தளபாடங்கள் தயாரிக்கும் கடை ஒன்றின் உரிமையாளரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
42 வயதுடைய கடை உரிமையாளர் ஒரு பிள்ளையின் தந்தை ஆவார். இவரது மனைவி வேலை நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்விரோதம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மூன்று சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் 40, 45 மற்றும் 46 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களில் ஒருவர் ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.













