இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைவத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா (Kristalina Georgieva) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்
இந்தச் சந்திப்பு கொழும்பு, அலரி மாளிகையில் நேற்று (17) இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது, அரசாங்கம் முன்னெடுத்து வரும் தற்போதைய பொருளாதார நிலைப்படுத்தல் முயற்சிகளையும், அண்மைக்கால பொருளாதாரச் சவால்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்களை அரசாங்கம் கையாண்ட விதத்தையும் அவர் பாராட்டியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் நேற்றைய தினம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, தற்போதைய அரசாங்கத்தின் நல்லாட்சி மற்றும் ஊழல் எதிர்ப்பு மறுசீரமைப்புகளுக்கான அர்ப்பணிப்பு மூலம் விரைவான அபிவிருத்தி மற்றும் நிலைபேறான பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கான தனித்துவமான வாய்ப்பை இலங்கைக்கு வழங்குகிறது என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா (Kristalina Georgieva) தெரிவித்தார்.













