இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான ஐரோப்பாவின் மிக மோசமான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சியில் உக்ரேன் மற்றும் ரஷ்ய பேச்சுவார்த்தையாளர்கள் ஜெனீவாவில் இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கியுள்ளனர்.
இலட்சக்கணக்கானவர்களைக் கொன்று, மில்லியன் கணக்கானவர்களை தப்பி ஓட கட்டாயப்படுத்தி, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரேனின் பெரும்பகுதியை அழித்த மோதலை நிறுத்துவதற்கான அண்மைய இராஜதந்திர முயற்சியாக இந்தப் பேச்சுவார்த்தைகள் உள்ளன.
சுமார் நான்கு வருட போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது, ஆனால் முக்கிய பிராந்தியப் பிரச்சினையினால் ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையேயான சமரசம் ஒரு முட்டுக்கட்டையில் உள்ளது.
அபுதாபியில் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த முந்தைய இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
கிழக்கு டான்பாஸ் பிராந்தியத்தின் பெரும்பகுதி உட்பட, உக்ரேனின் சுமார் 20% பகுதியை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது.
உக்ரேன் நிராகரித்த பிராந்தியத்தின் மீதமுள்ள பகுதியை உக்ரேன் ஒப்படைக்க வேண்டும் என்று கிரெம்ளின் வலியுறுத்துகிறது.
அதேநரேம், ரஷ்யாவுடன் எந்தவொரு தீர்வும் எட்டப்படுவதற்கு முன்பு அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளிடமிருந்து வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்கள் வர வேண்டும் என்று உக்ரேன் கூறி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.














