அடையாளம் தெரியாத சடலமொன்றை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
மாத்தளை – கலல்பிட்டி பகுதியில், கடந்த 10ஆம் திகதி பாறைக்கு அருகில் சிதைவடைந்த நிலையில் ஆண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அவரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சுமார் 6 அடி உயரமுள்ளவர் எனவும், பச்சைநிற சட்டை, கருப்பு ஜெக்கெட் மற்றும் வெளிர் பச்சைநிற காற்சட்டை அணிந்திருந்ததாக பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.
இந்த நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்
தொலைபேசி இலக்கங்கள்
மாத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி – 071-8591082
மாத்தளை பொலிஸ் நிலையம் – 0662222222













