• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை வட மாகாணம் யாழ்ப்பாணம்
மாந்தை கிழக்கில் புதிய பாலங்கள் அமைக்கப்பட துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்

மாந்தை கிழக்கில் புதிய பாலங்கள் அமைக்கப்பட துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்

Hanushya P by Hanushya P
2026/02/18
in யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

மாந்தை கிழக்கு பிரதேசத்தில் மழைக்காலங்களில் ஏற்படும் போக்குவரத்துத் துண்டிப்பு மற்றும் தனிமைப்படுத்தலைத் தவிர்க்கும் வகையில், புதிய பாலங்கள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவற்றை அமைப்பதற்கான துரித நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகத் தெரிவித்தார்.

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட இடர் காரணமாகப் பாதிக்கப்பட்ட உட்கட்டமைப்புச் சேதங்களைப் பார்வையிடும் நோக்கில், ஆளுநர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் இன்று காலை நேரடி களப் பயணத்தை மேற்கொண்டனர்.

இதன்போது, பாண்டியன்குளம் – செல்வபுரம் பகுதியில் கடந்தகால எரிபொருள் விலை ஏற்றம் காரணமாக விவசாயிகளால் கைவிடப்பட்டிருந்த ஏற்றுநீர்ப்பாசனத் திட்டத்தை ஆளுநர் நேரில் பார்வையிட்டதுடன், விவசாயிகளுடனும் கலந்துரையாடினார். ‘விவசாயிகள் ஆர்வமாக இருப்பின், இலங்கை மின்சார சபைக்கு மின்சாரத்தை விற்பனை செய்யாத வகையிலான சூரியக்கலத் திட்டத்தின் மூலம் இதனை மீள இயக்க முடியும். இது தொடர்பில் விவசாயிகளுடன் பேசி இறுதித் தீர்மானத்தை அறியப்படுத்துங்கள்’ என அதிகாரிகளுக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

மேலும், வன்னிவிளாங்குளம் – பனங்காமம்பற்று வீதியில் மூன்று இடங்களில் பாலங்கள் இல்லாத காரணத்தால், மழைக்காலங்களில் மாந்தை கிழக்கு பிரதேசம் முழுமையாகத் தனிமைப்படுத்தப்படும் அபாயம் குறித்துச் சுட்டிக்காட்டப்பட்டது. அவ்விடங்களை நேரில் பார்வையிட்ட ஆளுநர், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் வீதி அபிவிருத்தித் திணைக்களம் இணைந்து இதற்கான மதிப்பீடுகளைத் தயாரிக்குமாறு உத்தரவிட்டார்.

அத்துடன், புளியங்குளத்திலிருந்து குமரிக்குளம் செல்லும் வாய்க்காலில் செல்வபுரம் காட்டுக்கரை வீதியிலுள்ள பாலத்தை விரிவுபடுத்துவது குறித்தும், வெள்ள நீர் மேவிப் பாயும் இடங்களில் புதிய பாலம் அமைப்பது குறித்தும் தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொண்டு சாத்தியப்பாட்டு அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் ஆளுநர் பணித்தார்.

தொடர்ந்து நட்டாங்கண்டல் பிரதேச மருத்துவமனை மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை ஆகியவற்றைப் பார்வையிட்ட ஆளுநர், மருத்துவமனையின் விடுதிகளை உடனடியாகத் திருத்தியமைத்து, மக்கள் பாவனைக்கு மீளக் கொண்டுவருமாறு அறிவுறுத்தினார்.

பாண்டியன்குளத்தில் இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட முன்னோடி வீட்டுத் திட்டத்தில், பல வீடுகள் மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுவதையும் ஆளுநர் பார்வையிட்டார். இது தொடர்பில் உரிய தரப்பினரின் கவனத்துக்குக் கொண்டு சென்று தீர்வு காண்பதாக அவர் உறுதியளித்தார்.

இக்களப் பயணத்தை தொடர்ந்து மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் பொதுமக்களின் குறைகேள் சந்திப்பும் இடம்பெற்றது.

இக்களப் பயணத்தில் முல்லைத்தீவு மாவட்டச் செயலர், வடக்கு மாகாண சுகாதார மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்களின் செயலாளர்கள், மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர்,பிரதேச செயலர், மாகாணத் திணைக்களங்களின் பணிப்பாளர்கள் (நீர்ப்பாசனம், வீதி அபிவிருத்தி, விவசாயம், சுகாதாரம்) வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பொதுமுகாமையாளர் மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

blank

Related

Tags: #athavan #athavannews #newsupdatedisaster in the areasN. VedhanayakanNorthern Provincial Governorrainy season in the Manthai East
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்-உதவியை கோருகிறது பொலிஸ்!

Next Post

தீ விபத்து: பலத்த தீக்காயமடைந்த தாய் உயிரிழப்பு!

Related Posts

யாழில் சர்வ மதக் குழுவுடனான கலந்துரையாடல்!
யாழ்ப்பாணம்

யாழில் சர்வ மதக் குழுவுடனான கலந்துரையாடல்!

2026-02-18
போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்துவோருக்கு எதிராக முறையிட கோரிக்கை
இலங்கை

போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்துவோருக்கு எதிராக முறையிட கோரிக்கை

2026-02-18
வடமாகாண நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய இடமாற்றக் கொள்கை
யாழ்ப்பாணம்

வடமாகாண நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய இடமாற்றக் கொள்கை

2026-02-18
டைனமைட் வெடிபொருள் பயன்படுத்தி  மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் கைது.
மன்னாா்

டைனமைட் வெடிபொருள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் கைது.

2026-02-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

கோப்பாய் பகுதியில் ஒருவர் தாக்கப்பட்டு கொலை!

2026-02-17
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள் கைது
யாழ்ப்பாணம்

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள் கைது

2026-02-16
Next Post
தீ விபத்து: பலத்த தீக்காயமடைந்த தாய் உயிரிழப்பு!

தீ விபத்து: பலத்த தீக்காயமடைந்த தாய் உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
edit post
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
edit post
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
edit post
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
edit post
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
edit post
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
edit post
தீ விபத்து: பலத்த தீக்காயமடைந்த தாய் உயிரிழப்பு!

தீ விபத்து: பலத்த தீக்காயமடைந்த தாய் உயிரிழப்பு!

0
edit post
மாந்தை கிழக்கில் புதிய பாலங்கள் அமைக்கப்பட துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்

மாந்தை கிழக்கில் புதிய பாலங்கள் அமைக்கப்பட துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்

0
edit post
போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்-உதவியை கோருகிறது பொலிஸ்!

0
edit post
அவுஸ்திரேலியப் பிரஜை ஒருவருக்கு சிரியாவிலிருந்து மீண்டும் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கு தடை

அவுஸ்திரேலியப் பிரஜை ஒருவருக்கு சிரியாவிலிருந்து மீண்டும் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கு தடை

0
edit post
நெருங்கும் சட்டசபை தேர்தல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.