• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழர்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்க ரவிகரன் வலியுறுத்தல்!

குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழர்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்க ரவிகரன் வலியுறுத்தல்!

Raviharan urges the release of ancestral Tamil lands surrounding Kurunthurmalai!

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/11/18
in இலங்கை, முல்லைத்தீவு, வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையை அண்டிய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் எல்லைக்கல்லிடப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ்மக்களின் பூர்வீக வாழ்விடக் காணிகளையும், வயல்காணிகளையும் உடனடியாக விடுவிப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனெவியிடம் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் இந்தவிடயத்தில் தீர்க்கமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு மக்களுக்குச் சாதகமான நிலை ஏற்படக்கூடிய விதத்தில் தம்மால் முடிவுகள் எடுக்கப்படுமென இதன்போது புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்ற குழு அறையில் 17.11.2026நேற்று இடம்பெற்ற புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டம் 17.11.2026நேற்று நாடாளுமன்ற குழு அறையில் இடம்பெற்றது.

இந்தக்கூட்டத்தில் குருந்தூர்மலை மற்றும் அதனைச்சுற்றியுள்ள வயல்நிலங்களில் இடம்பெறும் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கள் தொடர்பாக யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி சமர்ப்பித்த எழுத்துமூல பிரேரணைதொடர்பிலும் பேசப்பட்டது.

அந்தவகையில் குருந்தூர்மலையில் 1933ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியில் 78ஏக்கர் நிலம் தொல்பொரிளியல் தளமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.

அத்தோடு  அதன்பின்னர் தொல்பொருளியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்மூலம் குறித்த 78ஏக்கர் நிலத்திற்கு வெளியிலும் தொல்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், மேலும் 229ஏக்கர் நிலப்பரப்பை பேணப்பட்ட தொல்பொருளியல் பிரதேசமாக பிரகடனப்படுத்தும்நோக்கில் எல்லைக்கல் இடப்பட்டுள்ளதுடன், அந்தப் பகுதியில் மொத்தமாக 300ஏக்கருக்கும் காணிகள் தொல்லியல் திணைக்களத்திற்குரிய காணிகளாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அமைச்சின் அதிகாரியால் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த அதிகாரியின் கருத்திற்கு என்னால் மறுப்புத் தெரிவிக்கப்பட்டதுடன், குருந்தூர்மலையை அண்டிய பகுதியில் எமது தமிழ் மக்களுடைய பூர்வீக வாழ்விடக்காணிகள் மற்றும் பூர்வீக வயல்நிலங்களை ஆக்கிரமித்தே தொல்லியல் திணைக்களத்தால் எல்லைக்கல்லிடப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினேன்.

அத்தோடு அந்தப் பகுதியில் கடந்த 1984ஆம் ஆண்டுவரையில் தமிழ்மக்கள் வாழ்ந்தார்கள் என்பதையும், அங்கு பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தனர் என்பதையும் தெளிவுபடுத்தினேன்.

இந்நிலையில் யுத்த சூழல்காரணமாக 1984ஆம் ஆண்டு அங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்ததுடன், யுத்தகாலத்தில் மக்கள் அங்கு வசிக்கக்கூடிய நிலை இருந்திருக்கவில்லை என்ற விடயத்தினையும் தெரிவித்தேன்.

இவ்வாறான சூழலில் நீண்டகாலமாக பயன்பாடின்றியிருந்த மக்களின் காணிகளையே தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமித்திருக்கின்றது என்பதையும், அந்தக் காணிகளுக்குரிய ஆவணங்களும் மக்கள் சிலரிடம் இருக்கின்றது என்பதையும் சுட்டிக்காட்டினேன். அதேவேளை அமைச்சர் தண்ணிமுறிப்புப் பகுதிக்கு நேரில் வந்தால் தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமித்திருப்பது மக்களின் பூர்வீகக்காணிகள் என்பதற்கான ஆதாரங்களையும் என்னால் அமைச்சருக்கு காண்பிக்கமுடியும் எனவும் தெரிவித்தேன்.

எனவே தொல்லியல் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எமது மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமென இதன்போது புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரிடம் வலியுறுத்தினேன்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக இரண்டுதடவைக்குமேல் நான் நாடாளுமன்றிலும் பேசியிருப்பதை புத்தசாசன சமய மற்றும் கலாசார அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியதுடன், தாம் ஒருபோதும் மக்களின் காணிகளை அபகரிக்கப்போவதில்லை எனத் தெரிவித்தார்.

எனினும் தொல்லியலுடன் தொடர்புடைய விடயம் என்பதால்தான் இதுதொடர்பில் கவனஞ்செலுத்த வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு மக்களுடைய காணிகள் மக்களுக்கே கிடைக்கவேண்டுமெனத் தெரிவித்த புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவலகள் அமைச்சர், இந்தவிடயத்தில் தீர்க்கமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு மக்களுக்குச் சாதகமான நிலை ஏற்படக்கூடிய விதத்தில் தம்மால் முடிவுகள் எடுக்கப்படுமெனவுந் தெரிவித்தார்.

இந்நிலையில் தொல்லியல் திணைக்களம் என்பது மக்களின் காணிகளை கையகப்படுத்துகின்ற ஒரு அரச கட்டமைப்பு என்கின்ற எண்ணப்பாடே எமது மக்கள் மத்தியில் இருக்கின்றது.அந்தநிலை மாறவேண்டுமெனவும், குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளில் தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள  மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் இதன்போது தொடர்ந்தும் வலியுறுத்தினேன் – என்றார்.

Related

Tags: Raviharan urges the release of ancestral Tamil lands surrounding Kurunthurmalai!
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நானுஓயாவில் குளவி கொட்டி ஆறு மாணவிகள் பாதிப்பு!

Related Posts

நானுஓயாவில் குளவி கொட்டி ஆறு மாணவிகள் பாதிப்பு!
இலங்கை

நானுஓயாவில் குளவி கொட்டி ஆறு மாணவிகள் பாதிப்பு!

2026-11-18
மற்றுமோர் தங்கக் கடத்தல் நடவடிக்கை முறியடிப்பு!
இலங்கை

மற்றுமோர் தங்கக் கடத்தல் நடவடிக்கை முறியடிப்பு!

2026-11-18
செயற்கை நுண்ணறிவுக்கு ஏற்ற அறிவும் திறனும் கொண்ட மாணவர்களை உருவாக்க வேண்டும் – வடக்கு ஆளுநர்!
இலங்கை

செயற்கை நுண்ணறிவுக்கு ஏற்ற அறிவும் திறனும் கொண்ட மாணவர்களை உருவாக்க வேண்டும் – வடக்கு ஆளுநர்!

2026-11-18
இலங்கை – தாய்லாந்து இடையே விசா விலக்கு ஒப்பந்தம்!
ஆசிரியர் தெரிவு

இலங்கை – தாய்லாந்து இடையே விசா விலக்கு ஒப்பந்தம்!

2026-11-18
பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுக்க யாழ்ப்பாணத்தில் மாவட்ட மட்டக் கலந்துரையாடல்!
இலங்கை

பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுக்க யாழ்ப்பாணத்தில் மாவட்ட மட்டக் கலந்துரையாடல்!

2026-11-18
தலைமன்னார் கடற்பரப்பில் தங்கம் கடத்த முயன்ற இருவர் கைது!
இலங்கை

தலைமன்னார் கடற்பரப்பில் தங்கம் கடத்த முயன்ற இருவர் கைது!

2026-11-18

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழர்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்க ரவிகரன் வலியுறுத்தல்!

குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழர்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்க ரவிகரன் வலியுறுத்தல்!

0
நானுஓயாவில் குளவி கொட்டி ஆறு மாணவிகள் பாதிப்பு!

நானுஓயாவில் குளவி கொட்டி ஆறு மாணவிகள் பாதிப்பு!

0
மற்றுமோர் தங்கக் கடத்தல் நடவடிக்கை முறியடிப்பு!

மற்றுமோர் தங்கக் கடத்தல் நடவடிக்கை முறியடிப்பு!

0
செயற்கை நுண்ணறிவுக்கு ஏற்ற அறிவும் திறனும் கொண்ட மாணவர்களை உருவாக்க வேண்டும் – வடக்கு ஆளுநர்!

செயற்கை நுண்ணறிவுக்கு ஏற்ற அறிவும் திறனும் கொண்ட மாணவர்களை உருவாக்க வேண்டும் – வடக்கு ஆளுநர்!

0
பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுக்க யாழ்ப்பாணத்தில் மாவட்ட மட்டக் கலந்துரையாடல்!

பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுக்க யாழ்ப்பாணத்தில் மாவட்ட மட்டக் கலந்துரையாடல்!

0
குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழர்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்க ரவிகரன் வலியுறுத்தல்!

குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழர்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்க ரவிகரன் வலியுறுத்தல்!

2026-11-18
நானுஓயாவில் குளவி கொட்டி ஆறு மாணவிகள் பாதிப்பு!

நானுஓயாவில் குளவி கொட்டி ஆறு மாணவிகள் பாதிப்பு!

2026-11-18
மற்றுமோர் தங்கக் கடத்தல் நடவடிக்கை முறியடிப்பு!

மற்றுமோர் தங்கக் கடத்தல் நடவடிக்கை முறியடிப்பு!

2026-11-18
செயற்கை நுண்ணறிவுக்கு ஏற்ற அறிவும் திறனும் கொண்ட மாணவர்களை உருவாக்க வேண்டும் – வடக்கு ஆளுநர்!

செயற்கை நுண்ணறிவுக்கு ஏற்ற அறிவும் திறனும் கொண்ட மாணவர்களை உருவாக்க வேண்டும் – வடக்கு ஆளுநர்!

2026-11-18
இலங்கை – தாய்லாந்து இடையே விசா விலக்கு ஒப்பந்தம்!

இலங்கை – தாய்லாந்து இடையே விசா விலக்கு ஒப்பந்தம்!

2026-11-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: